கொல்கத்தாவில் பாரிய தீ விபத்து…! 9 பேர் பலி…!

0

இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் இருவர், ஒரு காவல் அதிகாரி உட்பட தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்களும் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர்.

கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ளரயில்வே கட்டடத்தில் நேற்று 08 ஆம் திகதி இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, தீயணைப்புப்படை வீரர்கள் 8 தீயணைப்புவாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றிருந்தனர்.

அக் கட்டடத்தின் 13ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது

.இந்த தீ விபத்தின்போது தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here