கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்…..! ஆய்வு தகவல்

0

உலகளவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டிருக்கின்றது.

முன்பு காணப்பட்ட அறிகுறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகளையும் கொண்டிருப்பதாக ஆய்வுகளில் தகவல் வெளிவந்துள்ளது.

சளி, காய்ச்சல் தவிர வேறுவிதமான அறிகுறிகளையும் கொண்டிப்பதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளாவன

இளஞ்சிவப்பு நிறத்தில் கண் காட்சியளித்தால் நீர்க் கோர்த்திருப்பது, வீக்கம் போன்றவைகளும் உருவாகலாம்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும்.

கொரோனா சிகிச்சைக்கு பிறகு சோர்வு, பலவீனம், தசை வலி போன்ற பாதிப்புகள் மாதங்கள் வரை நீடிக்கலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் நரம்பியல் பாதிப்புக்கான ஞாபக மறதி, தூக்கமின்மை உள்பட நரம்பியல் பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இரைப்பை சார்ந்த பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல், வலி ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

மூச்சு விட சிரமப்படுவது, இதயம் படபடப்புடன் துடிப்பது, மார்பில் அசவுகரியம் ஏற்படுவது போன்றவையும் கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

இதயம் வேகமாக துடிப்பது அல்லது இதய படபடப்பு தொடர்ந்து கொண்டிருப்பது கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

வழக்கமான இருமலில் இருந்து வேறுபட்ட ஒலியுடன் தொடர்ச்சியாக இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here