கொரோனா வைத்தியசாலை தீ விபத்து! 13 தொற்றாளர்கள் துடிதுடித்து மரணம்

0

கொரோனா ​தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கு சிகிச்சைப்பெற்றுவந்த நோயாளர்களில் 13 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் இருந்து 70 கிலோ​ மீற்றர் தொலைவிலுள்ள விரார் நகரில் வசை என்னுமிடத்தில் உள்ள விஜய் வல்லப் வைத்தியசாலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தை அடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 3.30 மணியளவில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏசி வெடித்து தீப்பிடித்தது என்று சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஒரு பொலிஸ் காரர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தீப்பற்றியபோது தீவிர சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளிகள் இருந்தனர். 4 நோயாளிகளும், ஊழியர்களும் வெளியேறினர். ஆனால், மற்ற நோயாளிகளால் வெளியேற முடியவில்லை.

வெளியேறிய நோயாளிகள் 4 பேரும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கொரோனா அல்லாத நோய்களுக்காக சிகிச்சை பெற்றுவந்த 80 நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை.

கடந்த புதன்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு மருத்துவமனையில் ஒக்சிஜன் தாங்கியில்ஏற்பட்ட கசிவு காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்தனர்.

விஜயவாடாவில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் கொல்லப்பட்டனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஒரு கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இது தவிர, கோவிட் சிக்கல் ஏற்பட்டது முதலே இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெறும் பல மருத்துவமனையிகளில் தீவிபத்து ஏற்பட்டு நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here