கொரோனா விதிமீறிய ஜனாதிபதிக்கு அபராதம் விதித்த பிரபல நாடு!

0
Brazilian President Jair Bolsonaro (C) heads a motorcade rally with his supporters in Rio de Janeiro, Brazil, on May 23, 2021. - Bolsonaro led a procession of several thousand motorcycles that marched through the streets of Rio de Janeiro for a demonstration in his support, sparking numerous demonstrations amid the pandemic. (Photo by Andre BORGES / AFP)

முகக்கவசம் அணியாமல் சைக்கிள் பேரணியில் பங்கேற்றிய பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக அரசு அபராதம் விதித்துள்ளது.

பிரேசியின் சாவ் பாலோ நகரத்தில் கடந்த புதன்கிழமை “Accelerate for Christ” எனற மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மோட்டார் தங்கள் சைக்கிள்களுடன் பங்கேற்றனர்.

பிரேசில் நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தலைலையில் நடத்தப்பட்ட இந்த பேரணியை அவர் ஆரம்பித்தார்.

அப்போது, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த பொதுவெளியில் அவர் முக்கவசம் அணியாமல், Visor அல்லாத ஒரு ஹெல்மெட்டை மட்டும் அணிந்து பேரணியை ஆரம்பித்தார்.

இந்நிலையில், மாநில சுகாதார விதிகளை மீறியதற்காக சனிக்கிழமையன்று ஜனாதிபதி மீது 100 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மறுதேர்தலைத் சந்திப்பதற்காக பிரேசில் முழுவதும் இதுபோன்ற பேரணிகளை நடத்தி வரும் போல்சனாரோ, அரசியல் போட்டியாளரான சாவ் பாலோவின் ஆளுநர் ஜோவா டோரியாவின் (Joao Dori) முன் எச்சரிக்கையை மீறி மாநில விதிமுறைகளை கடைபிடிக்க தவறியுள்ளார்.

இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்புக நடவடிக்கைகள் தொடர்பாக போல்சனாரோ ஆளுநர் டோரியா மற்றும் பிற ஆளுநர்களுடன் பலமுறை மோதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here