கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முறை… விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்பு

0

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி பல உயிர் பலிகளை காவுக்கொண்டுள்ளது.

அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கண்களை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து செயலிக்கு அனுப்பி, கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முறையை ஜெர்மனி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த செயலிக்கு semic eye scan என்று பெயரிடப்பட்டுள்ளது.

கண்ணில் உள்ள இளஞ்சிவப்பு அலலர்ஜி அறிகுறி மூலம் கொரோனா தோற்ற இது உறுதி செய்கிறது.

70 ஆயிரம் பேரிடம் இதை சோதித்து உள்ளதாகவும், 95 சதவீதம் சரியாக உள்ளதாகவும் மூன்று நிமிடங்களில் இந்த சோதனையை செய்து முடிவை விரைவில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here