Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் சில அமுலுக்கு வந்தன.
பிரான்சில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 98 சதவிகிதம் பேரும் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆரஞ்சு நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வரும் அனைவரும், அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும் அல்லது பெறாவிட்டாலும் பயணிப்பதற்கு 48 மணி நேரம் முன்பு செய்துகொண்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும்.
தடுப்பூசி பெறாதவர்கள் தாங்கள் அத்தியாவசிய காரணத்துக்காக வருவதாக நிரூபித்தால் மட்டுமே பிரான்சுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பிரித்தானியாவை விட பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பிரான்ஸ் தனது சிவப்புப் பட்டியலில் இருந்த அனைத்து நாடுகளையும் ஆரஞ்சுப் பட்டியலுக்கு மாற்றிவிட்டது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பெற்ற அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனைக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, பெப்ரவரி மாத நடுப்பகுதி வாக்கில் ஒரு அறிவிப்பு வெளியாகும் என அரசு தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.