கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை!

0

கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு மாடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.

இதையடுத்து தற்போது அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பரிசோதித்து பார்த்ததில், குழந்தையின் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஆன்டிபாடி உருவாகியிருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்பு சக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து கிடைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த எதிர்ப்பு சக்தி குழந்தையின் உடலில் எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here