கொரோனா நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் ஏற்படும் ஆபத்து

0

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் இடம்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

எனவே கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டில் இருந்தே சிகிச்சை அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பல பிரச்சினைகள் தோன்றும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் அற்ற நபர்களை வீட்டில் வைத்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், போதியளவு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here