கொரோனா தொற்றை மறந்த இலங்கையர்கள்!

0

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டாலும், கொவிட் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ள நிலையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்களின் நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் கொரோனாவின் ஆபத்து மறைந்துவிட்டது போல நடந்து கொள்கிறார்கள் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் வார இறுதியில் உல்லாசப் பயணங்களை எப்படி அனுபவித்தார்கள் என்பதை நாங்கள் ஊடகங்களில் பார்த்தோம். மக்களிடமிருந்து இது போன்ற பொறுப்பற்ற நடத்தையை மன்னிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் இந்த வழியில் தொடர்ந்து செயற்பட்டால், அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, மக்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கொவிட் -19 க்கு எதிரான போரில் எந்தத் தடையும் ஏற்படக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here