கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது..! நிபுணர்கள் எச்சரிக்கை!

0
Concept with fake label

உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை நம்மால் ஒழிக்க முடியாது என்று பிரபல நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் இயக்குநரும், மருத்துவம், சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியருமான டாக்டர் Dr Shiv Pillai கொரோனா வைரஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கும். அதை நம்மால் ஒழிக்கவே முடியாது.

எனவே கொரோனா தொற்றுடன் நாம் வாழ பழகி கொள்வோம்.

ஆனால் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

Omicron வைரஸில் இருந்து உருமாறியBA.2 மாறுபாடு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் டெல்டா, ஆல்பா, பீட்டா மற்றும் காமா போன்ற கொரோனா மாறுபாடுகளை போல நுரையீரலை மோசமாக பாதிக்கவில்லை.

எனவே Omicron முதல் பதிப்பு BA.1 மற்றும் Omicron-னின் இரண்டாவது பதிப்பு ஆகியவற்றில் இறப்புகள் மற்றும் பதிப்பின் தீவிரத்தன்மை குறைவாக உள்ளது.

தொற்று பாதிப்பு குறைவாக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது மிகவும் அவசியம்.

பெரும்பாலும் தடுப்பூசி போடாத நபர்களை தான் கொரோனா வைரஸ் தாக்குகின்றது.

அதுமட்டும் இல்லாமல் நீண்ட காலம் அந்த பாதிப்பு உடலில் தங்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here