கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு 2 புதிய மருந்துகள் பரிந்துரை..

0

உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகின்றது.

அதனால் தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க இரண்டு மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆர்த்தரைட்டிஸ் மூட்டு வலி சிகிச்சைக்கான பாரிசிடினிப் மற்றும் ஆன்டிபாடி சிகிச்சை முறைக்கான சோட்ரோவிமாப் ஆகிய மருந்துகளை தீவிர நோய்ப் பாதிப்பு ஏற்பட்டோருக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.

பாரிசிடினிப் மருந்தினை நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் போது கொரோனா தீவிரத்தால் உயிரிழக்கும் நிலை ஏற்படும் வாய்ப்பு குறைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சோட்ரோவிமாப் மருந்து பலனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here