கொரோனா தொற்றுக்குளாகாத ஒரே நாடு…. சந்தேகிக்கும் நிபுணர்கள்

0

வட கொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜூன் 10 ஆம் திகதி வரை 30,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்,

ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என வட கொரியா உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா அளித்த புள்ளி விவரங்களின் படி ஜூன் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 733 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் 149 பேருக்கு influenza போன்ற நோய்கள் அல்லது கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் இருந்தன என குறிப்பிட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என வட கொரிய கூறிவருவது தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனாவை தடுக்க வட கொரிய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

வெளிநாட்டு தூதர்களை வெளியேற்றியது மற்றும் எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here