கொரோனா தொற்றில் இருந்து மீள்வது கடினம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.

தற்போது பல்வேறு நாடுகளில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றது.

அத்துடன், மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன.

பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து பரவி வருகிறது.

இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புகின்றனர்.

ஆனால் அது தவறானது, கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here