கொரோனா தொற்றின் முடிவு….. விஞ்ஞானிகள் விளக்கம்…

0

கனடாவில் உள்ள டொரோன்டோ பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் பல வகை தரப்பட்ட கொரோனா ரக கிருமி குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று நோயிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஏற்ற வகையிலான பாதுகாப்பானதும் செயல்திறன் கொண்டதுமான தடுப்பூசியினை பெறக்கூடிய நம்பிக்கை தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் புரதங்கள் குறித்தும் பல வகை தொற்று குறித்தும் விரிவாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 வகையான கொரோனா வைரஸ் கிருமிகளையும், தற்போதைய கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆயிரக்கணக்கானவர்களின் மாதிரிகள் என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி குறித்த விரிவான விளக்கம் ஜேனல் ஒப் புரோட்டியோம் ரிசர்ச் என்ற விஞ்ஞான ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here