கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்

0

இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துபோனதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

பின்னர் இறந்த அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அதற்கும் கொரோனா தொற்றியிருந்தது தெரியவந்தது.

ஆனால், குழந்தையின் மரணத்துக்கு காரணம் கொரோனாதானா என்பது தெளிவாக தெரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலில் இதேபோல் கொரோனா தாக்கிய ஒரு கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது நிகழ்ந்துள்ளது இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here