கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வருமா? பிரேசில் நாட்டு அதிபரின் பேச்சால் பரபரப்பு!

0

கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வரும் என பிரேசில் நாட்டின் அதிபர் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் சுகாதார துறை அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

எனவே ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றார்கள் என்பதும் குறிப்பாக இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் நோய் பரவும் என பிரேசில் அதிபர் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சை கொண்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக் நீக்கி உள்ளது என்பதும் அதிபரின் பேச்சுக்கு அறிவியல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here