கொரோனா தடுப்பூசி பெற்ற கனேடிய பெண் பலி…!

0

கனடாவில் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஏற்பட்ட பாதிப்புகளால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உயிரிழந்தார் என அம்மாகாண தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட immune thrombotic thrombocytopenia (VITT) பாதிப்பு தான் காரணம் என உறுதியானதாக மருத்துவர் தீனா ஹின்ஷா கூறினார்.

எந்தவொரு மரணமும் துன்பகரமானதாக இருந்தாலும், கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணம் அல்லது அனுபவிக்கும் கடுமையாக விளைவுகள், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியால் ஏற்படும் ஆபத்தை விட மிக அதிகமாக இருக்கின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று மருத்துவர் தீனா ஹின்ஷா ர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி போட்ட பிறகு உயிழிந்தார், கனடாவில் தடுப்பூசி போட்ட பிறகு ஏற்பட்ட முதல் பலி அது தான் என்பது நினைவுக் கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here