கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி, முதலாவது தடவை செலுத்தப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இரண்டாவது தடவை செலுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 29ஆம் திகதி, முதல் தடவை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, ஏப்ரல் 29 ஆம் திகதி அளவில் இரண்டாவது தடவை தடுப்பூசி செலுத்தப்படும்.

ஏனெனில், முதலாவது முறை தடுப்பூசி ஏற்றுவதன்மூலம், தொற்றுப் பரவலானது 64 சதவீதமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பது உறுப்படுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here