கொரோனா தடுப்பூசி பெறும் இளைஞர்களுக்கு ஏற்படும் புதிய சிக்கல்!

0

இஸ்ரேலில் Pfizer கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் வயதினர் குறிப்பாக இளைஞர்களிடையே (Myocarditis) எனப்படும் இதய தசைகளில் அழற்சி ஏற்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில், டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை 5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி போட்டவர்களிடையே 275 Myocarditis நோய்கள் பதிவாகியுள்ளன.

இவ்விடயத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையத்தின் ஆய்வின் முடிவுகளை இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதய அழற்சியால் பாதிக்கப்டப்ட பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கு மேல் சிகிச்சை பெறவில்லை.

அதற்குள் குணமடைந்து வீடு திரும்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 95% நோயாளிகளுக்கு லேசான பாதிப்பே இருந்தததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது டோஸ் (Pfizer) தடுப்பூசி பெறுவதற்கும், 16 முதல் 30 வயதுடைய ஆண்களிடையே Myocarditis தோன்றுவதற்கும் இடையே தொடர்பு உள்ளது.

இதுபோன்ற தொடர்பு மற்ற வயதினரை விட 16 முதல் 19 வயதுடைய ஆண்களிடையே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து PFIZER நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், Myocarditis பாதிப்பு குறித்து இஸ்ரேலிய ஆய்வு பற்றி அறிந்திருப்பதாகவும், இந்த பாதிப்புக்கு PFIZER தடுப்பூசி தான் காரணம் என எதுவும் நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here