கொரோனா தடுப்பூசி பெறுபவர்களுக்கு கஞ்சா இலவசம்!

0

அமெரிக்காவில் வாஷிங்டன் மாநில அரசு தடுப்பூசி போட ஊக்குவிக்கும் முயற்சியாக ஊசி போடுபவர்களுக்கு கஞ்சா சிகரெட்டுகளை இலவசமாக வழங்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள கஞ்சா விற்க உரிமம் பெற்ற கடைகள், கொரோனா தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் கஞ்சா சிகரெட் இலவசமாக வழங்கலாம் என அம்மாநிலத்தின் மதுபானம் மற்றும் கஞ்சா வாரியம் அறிவித்துள்ளது.

அதாவது, ஜூலை 12 ஆம் தேதிக்குள் கஞ்சா கடைகளில் இருக்கும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடும் 21 வயது மேற்பட்டவர்களுக்கு ஒரு இலவச கஞ்சா சிகரெட் வழங்கலாம் என வாரியம் அறிவத்துள்ளது.

இதற்கு ‘Joints for Jabs’ திட்டம் என மாநில மதுபானம் மற்றும் கஞ்சா வாரியம் பெயரிட்டுள்ளது.

அதே போல் பார்கள் மற்றும் உணவகங்களில் தடுப்பூசி போட்ட ஆதார சான்றிதழை காட்டும் வாடிக்கையாளருக்கும் இலவசமாக மது வழங்க ஏற்கனவே வாரியம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here