கொரோனா தடுப்பூசி செலுத்திய பிரித்தானிய செய்தியாளர் மரணம்!

0

பிபிசி செய்தியாளர் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டபின் உருவான இரத்தக்கட்டிகளால் பலியாகியுள்ளார்.

Newcastle பிபிசி ரேடியோவில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் Lisa Shaw (44).

அவர் ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்ட நிலையில், சில நாட்களில் அவரது நிலைமை மோசமடைந்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட Lisaவுக்கு இரத்தக்கட்டிகள் மற்றும் தலையில் இரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளுக்காக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார் Lisa.

இந்நிலையில், Lisaவின் மரணத்துக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்பட்ட பிரச்சினைகளே காரணம் என நீதிமன்ற விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதுவரை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 417 பேருக்கு அதனால் இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்றாலும், பாதிப்புக்கு அல்லது மரணத்துக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிதான் காரணம் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில்லை.

ஆனால், Lisaவின் மரணத்துக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்பட்ட பிரச்சினைகள்தான் காரணம் நீதிமன்ற விசாரணை அதிகாரிகள் என தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, ஒருவரது மரணத்துக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிதான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகிறது.

தங்கள் செய்தியாளர் உயிரிழந்ததால் தாங்கள் கவலையடைந்திருப்பதாக தெரிவித்துள்ள Newcastle பிபிசி ரேடியோ, அவருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here