கொரோனா தடுப்பூசியால் விவேக் மரணமடைந்ததாக புகார்

0

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக் மரணம் அடைவதற்கு ஒரு நாள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருந்ததால் தடுப்பூசி காரணமாக அவர் உயிரிழந்தாரா? என்ற வதந்தி கிளம்பியது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் விவேக் மரணமடைந்தார் என விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை செய்ய தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விவேக் மரணம் தொடர்பாக விசாரணைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் விவேக்கின் மரணத்தில் மர்மம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here