கொரோனா தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்ட நபர் மரணம்..! பிரான்ஸில் பரபரப்பு

0

பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைவருமான Jose Evrard தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர் Northern France பகுதியில் உள்ள Pas-de-Calais பகுதியில் வசித்து வந்தவர்.

76 வயதான Jose Evrard கொரோனோ கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது மறைவிற்கு தேசிய சட்டமன்றத்தின் தலைவர் Richard Ferrand தனது ட்விட்டர் பக்கத்தில், Jose Evrard மறைவால் வாடும் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் அவரது சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இவரது மரணம் தடுப்பூசியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here