கொரோனா தடுப்பூசிக்கு எதிராக இழப்பீடு கேட்கும் மக்கள்..!

0

டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு பக்கவாதம், இரத்த உறைவு, கருச்சிதைவு, மற்றும் மரணம் கூட ஏற்பட்டுள்ளது.

டென்மார்க்கில் சுமார் 37 பேர் கொரோனா தடுப்பூசி பெற்ற பிறகு ஏற்பட்ட பாதகமான விளைவுகளுக்கு இழப்பீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரும்பாலான வழக்குகள் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியுடன் தொடர்புடையவை.

ஃபைசர் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி தொடர்பாக மேலும் எட்டு பேர் இழப்பீடு கோரியுள்ளனர்.

டென்மார்க்கில், நோயாளிகள் ஏதேனும் மருந்துகளின் அரிதான அல்லது கடுமையான பாதகமான விளைவுகளை எதிர்கொண்டால் அவர்கள் அரசால் வழங்கப்படும் இழப்பீடுகளுக்கு தகுதியுடையவர்கள்.

இறந்த நோயாளிகளின் உறவினர்களும் இழப்பீடு பெறலாம். பக்க விளைவுகள் இல்லாத எந்த மருந்தும் இல்லை என்ற போதும், கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்பட்ட மக்கள் புகார் அளிக்க முன்வரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இரத்த உறைவு விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், ஐரோப்பாவில் முதல் நாடாக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மொத்தமாக தடை செய்தது டென்மார்க்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here