கொரோனா தடுப்பூசிகள் வாழ்நாள் பாதுகாப்பளிக்கக்கூடியவை….. ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

0

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் வாழ்நாள் பாதுகாப்பாளிக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் நோயெதிர்ப்பு செல்கள் தொற்றுநோயை அடையாளம் கண்டிருப்பதாகவும், இது எட்டு மாதங்களுக்கு பின்னர் அவர்களின் எலும்பு மஜ்ஜையில் கண்டறியப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் பைஸர் அல்லது மாடர்னா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் வாழ்நாள் பாதுகாப்பு கிடைக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், கொரோனா பாதிக்காதவர்களுக்கு பைஸர் அல்லது மாடர்னாவால் இதே பலன் கிடைக்கும் என்பது சந்தேகம் என ஆய்வை முன்னெடுத்து நடத்திய நிபுணர் Dr Ali Ellebedy தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்ட 41 பேர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இது நிரூபணமாகியுள்ளதாக Dr Ali Ellebedy சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here