கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் WHO அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்து வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறந்த பயனளிப்பதாக உலக சுகாதர ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் தற்போது 2 ஆவது அலையை ஏற்படுத்தியுள்ள உருமாறிய கொரோனா பெருந்தொற்றுக்கும் அனைத்து வகையான கொரோனா தடுப்பூசிகளும் பயனளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து வகை கொரோனா வைரஸ்களுக்கு , அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பதிலளிக்கின்றன என உலக சுகாதர ஸ்தாபனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகை கொரோனா வைரஸ்களையும் தற்போது வரை பயன்பாட்டிலுள்ள அதே பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here