கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட பின் நடுத்தர வயது பெண்கள் மிகவும் கடுமையான, நீண்டகால நோய் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.
பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வுகளில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில், 70 சதவீதமான நோயாளிகள் கவலை முதல் மூச்சுத் திணறல், சோர்வு, தசை வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆய்வில் உள்வாங்கப்பட்டனர்.
இதில் 70 சதவீதமானோர் வரை முழுமையாக குணமடையவில்லை என்று கண்டறியப்பட்டது.
சராசரியாக ஐந்து மாதங்களில் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் ஏழு மடங்கு அதிக மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அதே வயதில் நோய்வாய்ப்பட்ட ஆண்களை விட இரண்டு மடங்கு மோசமான சோர்வைப் புகாரளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.