கொரோனா குறித்து எச்சரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ்

0

கொரோனா தொற்றானது உலக நாடுகளை பாரிய அளவில் அச்சுறுத்தி வந்துள்ளது.

மேலும் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில் பல ஆபத்தான உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் உருவாகக்கூடும்.

உலகளவில் தொற்று பரவல் தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தெரிவிக்கையில், பெருந்தொற்று முடிவுக்கு வரும் காலம் இன்னும் வெகுதொலைவில் உள்ளது.

இதன் மோசமான நிலை இன்னும் வெளிப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிரமான மாறுபட்ட வகை கொரோனா தொற்றுக்கான ஆபத்து 5 சதவீதத்திற்கு மேல் உள்ளதாகவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே, அடுத்த பெருந்தொற்று பரவலுக்கு உலகம் தயாராகவில்லை என பில்கேட்ஸ் எச்சரித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here