கொரோனா அச்சத்தில் இலங்கையர்கள்! அவசர சேவைக்கு 4000 அழைப்புகள் – 11 000 குறுஞ்செய்திகள்

0

சுகாதார அமைச்சு , இலங்கை மருத்துவ சங்கம், மொபிடெல் நிறுவனம் மற்றும் கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் இணைந்து கொவிட் தொற்றாளர்களுக்கான சேவை வழங்கும் தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி சேவையை ஆரம்பித்திருந்தன.

அவற்றில் 247 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 4 நாட்களில் 4000 பேர் அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு , 1904 இலக்கத்திற்கு 11 000 குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் வைத்தியர் இந்திக கருணாரத்ன தெரிவித்தார்

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை துரிதமாக இனங்காணல் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதித்தல் என்பவற்றுக்காக சுகாதார அமைச்சு , இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் மொபிடெல் நிறுவனம் இணைந்து தொலைபேசி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதற்கமைய அவசர சிகிச்சை தேவைப்படும் தொற்றாளர்கள் 1990 அம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.

இதேவேளை மேல் மாகாணத்திலுள்ள எந்தவொரு நபரும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவராக இருந்தாலோ அல்லது தொற்றாளருடன் நேரடி தொடர்பைப் பேணியமையால் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிப்பவராக இருந்தாலோ 1904 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும்.

அல்லது 247 என்ற இலக்கத்திற்கு அழைத்து வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இலக்கத்திற்கு அழைத்து 2 நிமிடங்களில் வைத்தியரகள் நோயாளர்களுடன் உரையாடுவர்.

அதன் பின்னர் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களா அல்லது வீடுகளில் சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்களா என்பதை குறித்த வைத்தியர்கள் தீர்மானிப்பர்.

247 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 4 நாட்களில் 4000 பேர் அழைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதே போன்று 1904 இலக்கத்திற்கு 11 000 குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெற்று அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2000 – 3000 தொற்றாளர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here