கொரோனாவை தடுக்க புதிய முயற்சியை கையாளும் பிரித்தானியா

0

உலகளவில் கொரோனா தொற்றானது அதிதீவிரமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் தற்போது கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களிடையே செலுத்தப்படுகின்றது.

இருப்பினும் தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக முதலாவது டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டாவது டோஸை தாமதப்படுத்துவதன் மூலம் பெரும்பாலானோர் முதல் டோஸை பெற முடியும், இது ஐந்தில் ஒரு பங்கு வரை இறப்பைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

முதல் டோஸ் 80 சதவீத பாதுகாப்பை வழங்கினால், இரண்டாவது டோஸ் தாமதப்படுத்தினால், இறப்பு 1,00,000 பேருக்கு என்ற விகிதத்தில் 207 ஆக குறைந்தது.

தாமதப்படுத்தாமல் வழக்கமான காலக்கெடுவிற்குள் மக்களுக்கு இரண்டாவது டோஸ் போட்டால், இறப்பு 1,00,000 பேருக்கு என்ற விகிதத்தில் 233 ஆக உள்ளது.

பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு 1,00,000 அமெரிக்க வயதுவந்தோரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடுப்பூசி விகிதங்கள் ஒரு நாளைக்கு 0.1 முதல் 0.3 சதவிகிதம் வரை இருந்தால், இரண்டாவது டோஸ் தாமதப்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here