கொரோனாவை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியம் – சுமந்திரன்

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவினை கையாளும் வகையில் விசேட சட்ட ஏற்பட்டினை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“உலக நாடுளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளன. கொரோனா சட்டமூலம், கொரோனா வைரஸ் சட்டமூலம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளன.

உதாரணத்திற்கு இத்தாலி, பிரித்தானியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளை உதாரணமாகக் கூறலாம். நாடாளுமன்றம் சட்டமியற்றும் பணியினைக் கொண்டிருந்த போதிலும் இதுவரை கொரோனாவை தடுக்கும் வகையில் புதிய சட்டம் எதனையும் இயற்றவில்லை.

அண்மையில் நீதியமைச்சர் புதிய சட்டம் கொண்டவரப்படவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனாலும் இதுவரையிலும் எந்த சட்டமூலமும் கொண்டுவரப்படவில்லை.

புதிய சட்டத்தினைக் கொண்டுவருமாறு மனித உரிமை ஆணையாளர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினையும் எழுதியிருந்தார். ஆனாலும் இன்று வரை புதிய சட்டம் இயற்றப்படவில்லை.

நாட்டில் ஏற்பட்டடுள்ள இந்த அனர்த்தினை எதிர்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று கட்டாயம் உருவாக்கப்படுதல் அவசியமாகின்றது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here