கொரோனாவை அடுத்து உலகத்தை அச்சுறுத்தும் மற்றுமொரு பேரழிவு

0

உலகத்தில் கொரோனா பேரழிவை அடுத்து விஞ்ஞானிகள் அந்தமான் தீவில் ஒரு கொடிய தொற்றுநோயை கண்டுப்பிடித்துள்ளனர்.

அந்தமானில் மல்டிட்ரக்-எதிர்ப்பு உயிரினமான கேண்டிடா ஆரிஸின் (Candida auris) தெளிவான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கேண்டிடா ஆரிஸ் ஒரு ‘சூப்பர் பக்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஏனெனில் இது பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சையை எதிர்க்கும் தன்மைக் கொண்டது.

அதில் கொரோனா தொற்றுநோய் கேண்டிடா ஆரிஸின் பரவலான பாதிப்புகளுக்கு சரியான நிலைமைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி குழு சுமார் இரண்டு இடங்களில் இருந்து கேண்டிடா ஆரிஸை பிரித்தெடுத்து தனியாக ஐசோலேட் செய்துள்ளது.

அந்த இடங்களில் ஒன்று உப்பு சதுப்புநில ஈரநிலம் மற்றும் கடற்கரை பகுதி என்று கூறியுள்ளனர்.

சதுப்பு நிலத்தில் கண்டறியப்பட்ட ஆரிஸ் தனிமைப்படுத்தல்கள், தற்போது மருத்துவமனைகளில் காணப்படும் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றுகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவை என்று தெரிய வந்துள்ளது.

சூப்பர்பக் குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது, சி. ஆரிஸ் காயங்கள் வழியாக உடலில் நுழைவதற்கு முன்பு தோலில் உயிர்வாழ்கிறது.

இரத்த ஓட்டத்தில், அது கடுமையான நோயை ஏற்படுத்துகிறது மற்றும் செப்சிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

இதன் காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 11 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here