கொரோனாவுக்கு பலியான பிரபல நடிகை

0

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரே நாளில் ஒரு நடிகர் பாண்டு மற்றும் பாடகர் கோமகன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் சமீபத்தில் இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பிரபல நடிகை ஸ்ரீபிரதா கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இவர் ஹிந்தி மற்றும் போஜ்புரி திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் பழம்பெரும் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா, கோவிந்தா, ராஜ் பாப்பர் உள்ளிட்டவர்களுடன் நடித்த ஸ்ரீப்ரதா தற்போது கொரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து பாலிவுட் திரையுலகம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here