கொரோனாவுக்கான அரிய மருந்து….. உயிருள்ள பாம்பை சாப்பிட்ட நபர்

0

இந்தியாவில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மருந்து என கூறி உயிருள்ள பாம்பை சாப்பிட்ட நபர் கைதாகியுள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு 48 வயது என்பவர் தான் இந்த அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு விவசாயக் கூலி ஆவார்.

இவர் வயல்வெளியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றை உயிருடன் பிடித்து கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே அதனை வாயில் வைத்து கடித்து சாப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.

இதை தொடர்ந்து வடிவேலுவை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here