கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தயாரித்தாலும் வெவ்வேறு வேரியண்டுகள் மாறி மக்களை தாக்கி வருகின்றன.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் Omicron கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கத்தாரில் பிறந்து மூன்று வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா தாக்கி உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலியான குழந்தைக்கு வேறு எந்த மருத்துவ அறிகுறிகளும் தெரியவரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.