கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு காத்திருக்கும் அபாயம்

0

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக சுவிட்சர்லாந்தின் பாஸல் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறித்த ஆய்வில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் சராசரியாக 15 சதவீதம் பேர் புதிதாக கண்டறியப்பட்ட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆபத்து கட்டத்தில் இருக்கும் நோயாளிகளில் கொரோனா வைரஸ் கணையத்தின் பீற்றா செல்களைப் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இவை இன்சுலின் என்ற ஹார்மோனை உருவாக்குகின்றன.

இது திசு செல்களை இரத்தத்திலிருந்து சர்க்கரையை உறிஞ்சுவதற்கு தூண்டுகிறது.

ஆனால், கொரோனா வைரஸ் இந்த உயிரணுக்களில் எவ்வாறு ஊடுருவுகிறது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாஸல் பகுதியில் உள்ள 9 நோயாளிகளில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here