கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் குரலை இழக்கும் மக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

0

கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுகிறது, குரலை இழந்து விடுகின்றனர் என்பது கொல்கத்தாவில் மக்களிடையே பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸினால் தொண்டை பாதிக்கப்படுவதையடுத்து சிலருக்கு தற்காலிகமாக குரல் இழப்பு, பேச்சின்மை ஏற்படுகிறது. குரல் கரகரப்பாவதும், குரல் ஒலி அளவு குறைவதும், சிலருக்கு சில வாரங்களுக்கு பேச்சே வருவதில்லை என்றும் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. கொரோனா விளைவு இல்லை இது மாறாக குரல்வளையில் கிருமி தொற்றினால் கட்டு ஏற்பட்டு பேச்சிழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிஎம்ஆர்ஐ மருத்துவமனையின் நுரையீரலியல் நிபுணர் டாக்டர் ராஜா தர், தற்காலிகமாகத்தான் பேச்சிழப்பு, குரல் இழப்பு ஏற்படுகிறது, 15 நாட்கள் அல்லது 3 வாரங்களில் குரல் மீண்டு விடுகிறது. கோவிட் வைரஸ் கீழ் சுவாசப்பாதையை கடுமையாகப் பாதிப்பதோடு மேல் சுவாசப்பாதையையும் பாதிக்கிறது. இதனால் குரல்வளை அழற்சி ஏற்படுகிறது. இது சிலருக்கு உடனடியாக ஏற்பட்டு குரல் முற்றிலும் இழக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா பாதித்து முதல் வாரம் முதல் 3ம் வாரத்தில் இது ஏற்படலாம். 3 மாதங்கள் வரை குரலிழப்பு இருக்க வாய்ப்புள்ளது. இது நிரந்தரமாக குரலை காலி செய்யாவிட்டாலும், திடீரென குரலை இழக்கும் போது அதனால் ஏற்படும் மனக்கவலை பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கு ‘கோவிட் வாய்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.

நுரையீரல் திறன் குறைவதால் பேச்சு மெதுவாகவும் கஷ்டப்பட்டு பேசுவதாகவும் அறிகுறிகள் தோன்றுகின்றன. சிலருக்கு பேச்சே பிரச்சனை ஆகிவிடுகிறது, அவர்களை மட்டும் மெதுவாக இடைவெளி விட்டு பேசுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்கின்றனர். அழற்சி மறையும் போது குரலும் திரும்பிவிடுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு அல்லாமல் நோய்த்தொற்றுக்கு பிறகான நீண்ட கால களைப்பு அறிகுறிகளினாலும் குரல் போக வாய்ப்பிருக்கிறது. பொதுவான கடும் களைப்பு ஆற்றலிழப்பு ஆகியவையும் குரல்வளையைப் பாதிப்பதால் குரலிழப்பு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here