கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு பிரச்சனை… ஆய்வு தகவல்

0

கொரோனா தொற்றுக்கு ஆளானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்த ஓராண்டுக்குள் அவர்களுக்கு மாரடைப்பு தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்த ஓராண்டுக்குள் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது 60 சதவிகிதம் அதிகம் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதித்த சுமார் 150,000 பேருக்கும் அதிகமானோரின் மருத்துவமனை ஆவணங்களை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர்கள்,

ஒருவருக்கு கொரோனா தொற்றியதற்குப் பின் வரும் 12 மாதங்களில் அவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்க வாதம் வருவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.

கொரோனா தாக்காதவர்களை ஒப்பிடும்போது, கொரோனா தாக்கியவர்களுக்கு இதய பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு 55 சதவிகிதம் அதிகம் உள்ளதாக அவர்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்படும்போது, கொரோனா வைரஸ் உடலிலுள்ள செல்களை தாக்குகிறது.

அதனால் இதய செல்களும், நோய் எதிர்ப்பு அமைப்பும் கூட பாதிக்குள்ளாகும்.

மிதமான அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் முன்பு ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட கொரோனாவுக்குப் பின் இதயப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஆய்வை மேற்கொண்ட வாஷிங்டன் பல்கலைகழக ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் Dr Ziyad Al-Aly தெரிவிக்கையில்,

கொரோனாவைத் தொடர்ந்து, நாடுகள் இதய பிரச்சினைகளால் ஏற்படும் பழுவைத் தாங்க தயாராக இருக்கவேண்டும் என உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here