கொரோனாவிற்கு எதிராக நாய்களுக்கான தடுப்பூசியை பெறும் மக்கள்

0

தென் அமெரிக்க நாடான சிலியில் 75 பேர்களுக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு எதிராக நாய்களுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த செயலானது மிகவும் ஆபத்தானது என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இரண்டு கால்நடை மருத்துவர்களே, பொதுமக்களில் 75 பேர்களுக்கு நாய்களுக்கான தடுப்பூசி வழங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மாஸ்க் எதுவும் அணிந்துகொள்ளாமல் சிலியின் கலாமா நகரில் அமைந்துள்ள ஒரு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் தொடர்பில் தெரிய வந்ததும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

María Fernanda Muñoz என்ற கால்நடை மருத்துவர், கொரோனாவில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள நாய்களுக்கான 8 டோஸ்கள் கொண்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இவரது நடவடிக்கை மிக ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத் துறை, இது மக்களின் உயிருடன் விளையாடுவது போன்றது என தெரிவித்துள்ளது.

மேலும், அப்பகுதி மக்கள் பலர் நாய்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here