கொரோனாவால் குழந்தை பிறப்பு விகிதத்தில் சரிவு… எச்சரிக்கும் நிபுணர்கள்

0

கொரோனா ஊரடங்கால் பல நாடுகளில் கருவுறுதல் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் மட்டும் ஊரடங்கால் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதாக கவலையில் ஆழ்ந்துள்ளது.

ஊரடங்கால் வேலை இழந்து பலர் வருமானம் இழந்துள்ளதால், 2019-ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் 10 சதவிகிதம் அளவிற்கு திருமணங்களின் எண்ணிகை சிங்கப்பூரில் குறைந்துள்ளது.

பலர் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை தள்ளி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், சிங்கப்பூரில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 1.1 ஆக சரிந்துள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டில், 38,705 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

இதன் காரணமாகவே, பெருந்தொற்று சமயத்தில் குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு, அரசு தரப்பில் 5,31,000 ரூபாய் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டது.

பிறப்பு விகிதம் குறைந்தால் எதிர்காலத்தில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை, வெகுவாக குறையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் அரசுக்கான வரி வருவாய் குறைந்து, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செலவுகள் பாதிக்கப்படும்.

குடியேற்றக் கொள்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here