கொரியாவில் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

0

NVQ சான்றிதழ் என அழைக்கப்படும் தொழில்சார் தகைமை இன்றி கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை தெரிவித்தார்.

பொருத்துதல் மற்றும் அரைத்தல் போன்ற தொழில்வாய்ப்புகளுக்கு குறித்த சான்றிதழ் அவசியமில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஆரம்ப கட்ட வேதனமாக எட்டரை இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொரிய மொழியில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் குறித்த தொழில்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கொரியாவிற்கு தொழில்வாய்ப்புக்களுக்காக செல்வோருக்கு அரச வங்கிகளால் கடன் வழங்கும் திட்டம் ஒன்றும் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here