கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

0

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்று (புதன்னிழமை) மதியம் இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இலவச கல்வித்துறையை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை தடுக்க வேண்டியும் கல்வியை தனியார் மயப்படுத்தல் மற்றும் கல்வி நடவடிக்கையில் அரச தலையீடுகள் என்பவற்றை நிறுத்த கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அரச பல்கலைக்கழக முறைமை நீர்த்துப்போகச் செய்யும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறு, கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குங்கள், கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவ சட்டமூலத்தை கிழித்தெறி, இலவசக் கல்வியை பாதுகாக்க இலங்கையராக ஒன்றிணைவோம், எதிர்கால மாணவர்கள் கடனாளிகளாக மாற வேண்டுமா உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here