கொடூரமாக பெண் மருத்துவரை கொன்ற கும்பல்…..

0

எகிப்தில் 34 வயதான பெண் மருத்துவர் ஒருவர், தன் சக ஆண் ஊழியரை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அவர்கள் இருவரும் வீட்டுக்குள்ளிருக்கும்போது, அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்த அந்த வீட்டின் சொந்தக்காரர், காவலாளி மற்றும் பக்கத்துவீட்டுக்காரர் ஆகியோர் அந்த பெண்ணை அடித்து உதைத்து ஆறாவது மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்கள்.

கீழே விழுந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

எகிப்தைப் பொருத்தவரை, உறவினர் அல்லாத ஒருவருடன் தனிமையில் இருப்பது மிகவும் அவமானத்துக்கு உரிய விடயமாக கருதப்படுகின்றது.

சமீபத்தில், திருமணம் முதல் விவாகரத்து வரை ஆண்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர எகிப்து அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதால் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட ஒரு சூழலில், அந்த பெண் மருத்துவரைக் கொன்ற மூன்று பேர் மீதும் இன்னும் குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை.

அவர் மன நல பிரச்சினைகளால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கதை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அவர்களை தண்டிக்கவேண்டும் என எகிப்தில் பெண் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here