கையடக்கதொலைப்பேசியால் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

0

உக்ரைனில், போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு சாலையில் பெண் ஒருவர் மொபைலில் கவனம் செலுத்தியதால் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலை ஒன்றில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பயன்படுத்தி இளம்பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயல்வதை வீடியோவில் காணலாம்.

ஆனால், அவர் தனது மொபைலில் பேசிக்கொண்டே சென்றதால், தனக்குப் பின்னால் நின்ற ட்ரக் நகர்வதை கவனிக்கத் தவறிவிட்டார்.

அந்த ட்ரக் உயரமாக இருந்ததால், அந்த ட்ரக்கின் சாரதிக்கும் அந்த பெண் நிற்பது தெரியவில்லை.

திடீரென ட்ரக் நகர, ட்ரக் அந்தப் பெண் மீது மோதியுள்ளது.

அந்தப் பெண் கீழே விழ, கிட்டத்தட்ட ட்ரக்கின் சக்கரங்கள் அவர் தலையை நெருங்கும் திகில் காட்சியை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பின்னர், படுகாயமடைந்த நிலையில் அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

மொபைல் போன்கள் மீது கவனம் செலுத்துவதால் நிகழும் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்வதால் பொலிசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here