
அமெரிக்காவில் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கைத்தொலைபேசி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய புதிய முறையொன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில், கொரோனா வைரஸின் மரபணு கண்டறியப்படுகிறது.
இதுபற்றி வொஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி லூட்ஸ் (Barry Lutz) தெரிவிக்கையில்,
குறைந்த கட்டணத்தில் எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக இந்த சோதனையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
குறைந்த கட்டணம், உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை, உலகமெங்கும் அணுகக்கூடியதாக இருக்கும். திறன்பேசி (ஸ்மார்ட்போன்), டிடெக்டர் உதவியுடன் முடிவை தெரிந்து கொள்ளமுடியும்.
ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுகிறது.
20 நிமிடங்களில் முடிவை பெறமுடியும் என்றார்.
இதில் பயன்படுத்தக்கூடிய டிடெக்டர், ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.