கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடிய குழந்தை… கனடாவில் ஏற்பட்ட விபரீதம்!

0

கனடாவின் வின்னிபிக்கில் வீட்டில் லோட் செய்யப்பட்ட நிலையில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை குழந்தை எடுத்து அங்கும் இங்கும் திரிந்துள்ளது.

இதனைக் கண்ட குழந்தை பராமரிக்கும் சிறுமி, குழந்தையிடமிருந்து கைத்துப்பாக்கியை மீட்டு எடுக்க முயற்சித்துள்ளார்.

இதன் போது இருவரும் துப்பாக்கியை இருக்கிப் பிடித்து இழுக்க முயற்சித்துள்ளனர்.

தற்செயலாக துப்பாக்கி வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையொன்றிடமிருந்து கைத்துப்பாக்கியை மீட்ட போது ஏற்பட்ட விபத்தில் பதின்ம வயதுடைய சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, வயது வந்த பெண் ஒருவர் இந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போதிலும் குறித்த வீட்டில் அனுமதியின்றிறே கைத்துப்பாக்கியை குறித்த பெண் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான ஓர் சம்பவத்தை தான் தனது தொழில் அனுபவத்தில் சந்தித்தது கிடையாது.

இது பாரதூரமான ஓர் விளைவினை சில நேரங்களில் ஏற்படுத்திருக்கக் கூடும் எனவும் பொலிஸ் உத்தியோகத்தர் மெக்கின்னன் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here