கைக்குழந்தையை தரையில் படுத்திவிட்டு இளம் குடும்பப்பெண் எடுத்த விபரீத முடிவு

0

வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்றுமுன்தினம் இளம் குடும்பத்தலைவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருமணமாகி இரண்டு மாதம் நிறைந்த கைக்குழந்தை ஒன்றுடன் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணொருவரே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சம்பவதினம் இரவு வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கணவருக்கு பல தடவைகள் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி வீட்டிற்கு வருமாறு அழைத்தபோதும் கணவன் வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையிலே அயலவர்கள் வந்து பார்த்த போது, குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அவரின் இரண்டரை வயது குழந்தை தரையில் படுத்திய படி இருந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதைக்கு அடிமையாகிய கணவனின் நடவடிக்கையால் குறித்த பெண் மனமுடைந்து காணப்பட்டதாக அயலவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை மீட்ட பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here