கைக்குழந்தையின் அலறல் சத்தம்…! நரபலி கொடுத்த தாய்…!

0

இந்திய மாநிலம் தெலங்கானாவில், சூரிய பேட்டை பகுதியில் ஆறு மாத பெண் குழந்தையை, பெற்ற தாயே கழுத்தை வெட்டி நரபலி கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பாரதி வயது 32 தனது முதல் கணவனை விவாகரத்து செய்தபின், சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா என்ற விவசாயியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை இருந்தது.

பாரதி உடல் நலக்குறைவு, மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

கிருஷ்ணா, தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம் தனது பிரச்சினைகளுக்கு நிவாரணம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஜோசியர், உங்களுக்கு நாக தோஷம் உள்ளது.

நீங்கள் பெற்ற குழந்தையை பலி கொடுத்தால் நாக தோஷம் அகன்றுவிடும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாவும், பாரதியும் தங்கள் வீட்டில் ஜோசியரின் அறிவுரைபடி பலி பூஜை நடத்தினர்.

அப்போது, தனது 6 மாத கைக்குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

குழந்தையை பூஜையில் வைத்து மந்திரங்கள் கூறியுள்ளனர்.

அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை.

திடீரென குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டு, சிறிது நேரத்தில் அடங்கியது.

அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு இரத்தம் வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார், கிருஷ்ணா பாரதி இருவரையும் கொலை வழக்கில் கைது செய்துள்ளதுடன் சம்பவ குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here