இந்திய கேப்டன் விராட் கோலியின் ஒரு நாள் பதவியை 48 மணிநேரத்திற்குள் பிசிசிஐ பறித்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும், அவரை கேப்டன் பதவியை விட்டு தாங்களே விலக கூறியும், அவர் மறுத்ததால், பிசிசிஐ பதவி பறிப்பை செய்திருக்கிறது. ஆனால், பிசிசிஐ இது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறது.
இதனால், விராட்கோலியிடம் முறையாக எதுவும் தெரிவிக்காமலேயே இந்த முடிவை எடுத்ததால் அவர் பயங்கர வருத்ததிலும், அதிருப்தியிலும் உள்ளார். இதனால் தனது டெஸ்ட் கேப்டன் பதவியையும் விராட் கோலி ராஜினாமா செய்ய முடிவு எடுத்து, ஒரு வீரராக தொடர முடிவு எடுத்துள்ளதாக தகவல் லீக்காகி இருக்கிறது.
மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலிருந்து விலக முடிவு எடுத்துள்ள விராட் கோலி, சிறிது காலத்திற்கு டெஸ்டில் அணியில் மட்டும் கவன செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி, இல்லையேனில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க விராட் கோலி முடிவு எடுப்பார் என்ற தகவலும் வெளியாகிறது. இப்படி ஒரு முடிவால், பயிற்சியாளர் டிராவிட்டுக்கு மிகப் பெரிய சிக்கல் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலியை சமதானப்படுத்தி, அனைத்து போட்டிகளிலும் விளையாட வைப்பதே பெரிய சவலாக அவருக்கு காத்திருக்கிறது.
விராட் கோலி ஒரு தலை சிறந்த பேட்சமேன் ஆகவும், இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்திருக்கிறார். தற்போதைய அவரின் மோசமான ஃபார்மை கருதில் கொண்டு பிசிசிஐ எடுக்கும் முடிவு தவறான ஒன்று என நெட்டிசன்கள் பதில் எழுப்பி வருகின்றனர்.