குவாட் அமைப்பின் தலைவர்கள் இணையவழி மூலம் பேச்சுவார்த்தை

0

உக்ரைன் விவகாரம் தொடர்பில் குவாட் அமைப்பின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகளின் தலைவர்களான, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோர் நேற்றைய தினம் இணையவழி மூலம் கலந்துரையாடியுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இந்து – பசுபிப் உட்பட உலகளாவிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன தொடர்பில், தங்களின் அர்ப்பணிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here